Posts

வெங்காய சட்னி

"தாத்தா... இது என்ன சட்னி.?" "அதுவா.. அது வெங்காய சட்னி." "வெங்காய சட்னியா..?? ம்ம்ம்.. யாரு வச்சா?" "ஆச்சி தான் வச்சாங்க.. ஏன் நல்ல இல்லையா? "தாத்தா... நல்லா இல்லையான்னு கேட்க கூடாது..!! நல்லா இருக்குதான்னு தான் கேட்கணும்..!! சரியா.??" "அடேங்கப்பா... தாத்தா தெரியாம சொல்லிட்டேன்மா.. இனிமேல் நல்லா இருக்குதான்னு கேட்குறேன்.... சட்னி நல்லா இருக்கா செல்லக்குட்டி..?" கையில பிச்சு வச்சிருந்த சின்ன இட்லி துண்டை, அந்த சட்னில மெல்லமா ரெண்டு மூணு தடவை தொட்டு எடுத்து வாய்ல போட்டு மென்னுக்கிட்டே, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒண்ணு சேர்த்து "சூப்பாரா இருக்கு தாத்தா" அப்படின்னு சொன்னதும் தாத்தாவுக்கு பூரிப்பு தாங்க முடியல. உடனே "ஏம்மா.. இங்க பாரு உன் பேத்தி என்ன சொல்றான்னு.. நீ வச்ச சட்னி சூப்பரா இருக்காம்." ஆச்சி சமையல்கட்டை விட்டு வெளிய வந்து எட்டிப்பார்க்க, மறுபடியும் "ஆச்சி.. சட்னி சூப்பர்.."ன்னு சொன்னதும் ஆச்சிக்கும் அவ்வளவு சந்தோஷம். பக்கத்துல இருந்து என்னை பார்த்து அலட்சியமா ஒரு லுக்கு விடுறா என் மனைவி

தாப்பட் (Thappad) - என் பார்வையில்

சமூக வலைத்தளங்களில் பல ஆதரவு பதிவுகளை பார்த்த பின்பு நேற்று தான் இந்தப்படத்தை பார்த்தேன். படத்தின் கதை சிம்பிள், சொல்ல நினைத்த கருத்து வலிமையானது ஆனால் அதை சொன்ன விதம் சரியா என்பது என் கேள்வி.! பெண்களை அடிக்க கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு குடும்பத்தில் பெண்களை அடிப்பது ஒரு சாதாரண நிகழ்வு என்றும், குடும்ப நலனுக்காக ஒரு பெண் அடிகளையும் வலிகளையும் பொறுத்துப் போக வேண்டும் என்றும் நம் சமூகத்தில் இன்றும் மாறாமல் இருக்கும் அந்த பரவலான மனப்பாங்கு ஒழிய வேண்டும் என்பது தான் படம் சொல்லும் கருத்து. ஆனால் அதை விவாகரத்து மூலம் தான் நிறைவேற்ற முடியும் என்பதை ஏற்கமுடியவில்லை. கதை சுருக்கம் : வாழ்க்கையில் பல லட்சியங்களை வைத்துக்கொண்டு வேலையில் பிஸியாக அலைந்தாலும், அன்பான கணவன், பொறுப்பான மருமகன், அக்கறையான மகன் என்ற மற்ற பொறுப்புகளில் தன்னால் முடிந்ததை செய்யும் விக்ரம். லண்டன் சென்று குடியேறுவது தான் அவனின் முதல் குறிக்கோள். அதற்காக முழுமூச்சில் உழைக்கிறான்.அந்த நாளுக்காக காத்திருக்கிறான். வேலைக்கு செல்லும் கணவனுக்கு கார் வரை ஓடி சென்று 'ஒரு வாயாவது சாப்பிடுங்கள்' என்று ஊட்டிவிடுவதில் இ